×

2வது நாளாக தொடர்ந்த போராட்டம் டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் கைது

சென்னை: இரண்டாவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பணியாளர்களை காவல்துறையினர் மீண்டும் கைதுசெய்தனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், இ.எஸ்.ஐ.திட்டம் அமல்படுத்துதல், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமுல்படுத்துவதற்கு தனியாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியுசி) கடந்த 3ம் தேதி முன்தினம் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேரணியாக சென்று கோட்டையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றைய தினம் மீண்டும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் (ஏஐடியுசி) இணைந்து தமிழ்நாடு விற்பனையாளர் நல சங்கம், விடுதலை சிறுத்தைகள் பணியாளர் சங்கத்தினர் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Tags : TASMAC ,Chennai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி என்ன பொருளாதார...