200 போட்டியில் வென்ற ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

திருப்புவனம், பிப்.2:  திருப்புவனம் புதூரை சேர்ந்த வைரவன் 20 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். அந்த காளைக்கு கருப்பு என பெயரிட்டு குடும்பத்தினர் வளர்த்தனர். வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்து விட்டது. நேற்று காளையை அலங்கரித்து தாரை தப்பட்டை அடித்து டிராக்டரில் ஊர்வலமாக சென்று தோப்பில் அடக்கம் செய்தனர்.

மாடு வளர்த்த நடராஜன் கூறுகையில். ஜல்லிக்கட்டு காளை கருப்பு எங்கள் வீட்டுக்கு 20 வருசங்களுக்கு முன் கன்றுக்குட்டியாக வந்தது. 200 போட்டிகளில் பிடிபடாமல் பல பரிசுகளை வென்று வந்தது. மாடு இறந்த தகவல் அறிந்ததும் சுற்று வட்டாரத்திலிருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்களும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரும் காளைக்கு அஞ்சலி செலுத்தினர் என்றார்.

Related Stories: