×

திண்டிவனத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக மாஜி எம்எல்ஏ ஹரிதாஸ் திமுகவில் இணைந்தார்

 

திண்டிவனம்: திண்டிவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹரிதாஸ் திமுகவில் இணைந்தார். திண்டிவனம் தொகுதியில் கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஹரிதாஸ். இவர் சமீப காலமாக அதிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் திண்டிவனத்தில் இன்று தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை திறப்பு விழா ஆகியவை சிப்காட் வளாகத்தில் இன்று காலை நடந்தது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திண்டிவனம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹரிதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்வர் வாழ்த்தி வரவேற்றார்.

Tags : Majhi ,MLA Haridas Dimukh ,Principal ,Stalin ,Dindivanam ,Dindivanathil Mahalvar ,M.D. K. ,MLA ,Haridas Dimukh ,Haridas ,
× RELATED திமுக-காங்கிரஸ் இடையே தொடர்ந்து...