×

தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடக்கும் திமுகவின் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை: ஒன்றிய அரசின் வஞ்சகத்தை விளக்கி வருகின்றனர்

 

சென்னை: தமிழகம் முழுவதும் திமுகவின் ’தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை விருவிருப்பாக நடந்து வருகிறது. மக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் திட்டங்களை விளக்கி வருகின்றனர். தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுகவின் பிரசாரக் கூட்டங்கள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்துகொண்டிருக்கின்றன. பிப்ரவரி 1ம் தொடங்கிய திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் பிப்ரவரி 28 வரை தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறுகிறது. திமுகவின் தலைமைக் கழகம் நியமித்துள்ள 22 நட்சத்திரப் பேச்சாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுக்கூட்டங்கள், பகுதி முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் என்று கடந்த 3 நாட்களாக இந்தப் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இந்தப் பரப்புரை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர், ராயபுரம், நிலக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட 23 தொகுதிகளில் இந்தப் பிரசாரக் கூட்டங்கள் நடந்துள்ளன. இதில், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களான அமைச்சர்கள் கோவி செழியன், ராஜ கண்ணப்பன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பொன். முத்துராமலிங்கம், திண்டுக்கல் லியோனி, எம்.எம். அப்துல்லா, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட மேலும் சிலரும் பொதுக்கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வருகிறார்கள்.

இவற்றில் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இதுவரை 2000 க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுடன் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்கள். திமுகவின் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை மிகத் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த பரப்புரையின் போது திமுகவினர், மக்களுடன் இருந்து மக்களோடு வாழ்ந்து மக்களுடைய வீடுகளிலேயே உணவருந்தி அவர்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்களை விளக்கமாக சொல்லி வருகின்றனர். ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் எடுத்துச் சொல்லி வருகின்றனர். திமுகவினரின் இந்த பிரசாரம் தமிழகம் முழுவதும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags : Thimugh ,Tamil Nadu Thalakuniya ,Tamil Nadu ,EU government ,Chennai ,Dimuka ,Nadu Thalakuniya ,Dimuka government ,
× RELATED சட்டமன்ற தேர்தலுக்காக...