×

தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை: எடப்பாடி பழனிசாமி

சென்னை: ‘தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்து பார்த்தால்தானே விஜய்க்கு தெரியும்’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ‘விஜய் மக்களையும் பார்ப்பதில்லை. தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை. செய்தியாளர்களைச் சந்தித்தால்தான் களநிலவரம் விஜய்க்கு புரியும்.ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு யாரை ஊழல் சக்தி என்று சொல்கிறார் விஜய்?. கூட்டணிக்கு எந்தக் கட்சி தலைமை என்றே விஜய்க்கு தெரியவில்லை. கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என அமித் ஷாவே தெளிவுபடுத்திவிட்டார்’ எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Tamil Nadu ,Edappadi Palanisami ,Chennai ,Edapadi Palanisami ,Kalanilwaram ,Jayalalithawa ,
× RELATED திமுக தேர்தல் அறிக்கை குழுவின்...