- டாடா கெமிகல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராமநாதபுரம்
- வலினோகா
- திமுக அரசு
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு…
ராமநாதபுரம்: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி அளவிற்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்க பகுதியில் உப்பு உற்பத்தி அலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதலே மாநிலத்தில் மாபெரும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தியும், அடுத்தடுத்து முதலீட்டு மாநாட்டை நடத்தியும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி திராவிட மாடல் அரசு ஈர்த்து வருகிறது.
இதனால் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவும், முதலீடு செய்யவும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு ஆலைகளை அமைத்துள்ள டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், மேலும் ரூ.1,300 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டு, அதற்கான நடவடிகளைகளில் இறங்கியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்கம் பகுதியில் ரூ.515 கோடி முதலீட்டில் சமையலுக்கு பயன்படும் அயோடின் உப்பு ஆலையை அமைக்க இருக்கிறது.
இதற்கான பணிகள் அடுத்த 36 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தொழில் சாலை மூலம் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளன. இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு 2.10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 2029 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதைபோல் கடலூரில் ரூ.775 கோடி முதலீட்டில் சிலிக்கான் உற்பத்தி ஆலையை டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் நிறுவவுள்ளது. இந்த திட்டம் 2028 நிதியாண்டில் தொடங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு ஆலைகளிலும் சேர்த்து 1000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
