×

திருக்குறள் திருப்பணிகள் நிறைவு விழா

கூடலூர்,பிப்.4: கூடலூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 50க்கும் மேற்பட்டோருக்கு திருக்குறள் முற்றோதல் மற்றும் வாழ்க்கை நெறிமுறை குறித்து பயிற்றுவிக்கப்பட்டது.இந்நிலையில் 30 வகுப்புகளாக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணிகள் வகுப்பு நிறைவு விழா கூடலூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தனியார் கல்வி நிறுவன தாளாளர் பூபாலன் தலைமைத் தாங்கினார்.

புளூ மவுன்டன் ரோட்டரி கிளப் தலைவர் தன்ராஜ்,அன்புக்கரசி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் கண்காணிப்பு குழு உறுப்பினர் சக்தி, சுரேஷ், ரமணா மற்றும் ஜாபர், செவ்விதழ் சீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 30 வகுப்புகளிலும் தொடர்ந்து பங்கேற்ற மாணவ மாணவிகள்,பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்றுநர்கள் செந்தில் குமாரி, சக்திவேல் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 

Tags : Thirukkural Thirupanigal closing ceremony ,Gudalur ,Thirukkural Thirupanigal ,Tamil Development Department ,
× RELATED கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் அண்ணா நினைவு தினம்