×

நாளை மின்நுகர்வோர் குறைதீர் முகாம்

மதுரை, பிப். 4: மதுரை வடக்கு கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் முகாம் நாளை (பிப்.5) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டல அலுவலக வளாகத்தில் செயல்படும் வடக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் கூட்டம் நடைபெறும்.

இதில் மின் கட்டணம், மீட்டர் மாறுதல், குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர் நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் வழங்கி தீர்வு காணலாம். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

 

Tags : Madurai ,North division ,North ,Office ,Racecourse Road ,Madurai… ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு