×

சுமை தூக்கும் தொழிலாளி சடலமாக மீட்பு

தேனி, பிப். 4: தேனி நகர் கம்போஸ்ட் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் வீரணத்தேவர் மகன் செந்தில் என்ற சேனா(40). இவர் தேனி வாரச்சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது தாய், தந்தை இறந்த நிலையில், இவருக்கு உடன்பிறந்தவர்களும் இல்லாததால் மது போதைக்கு அடிமையாகி திரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தேனி நகர் நேருசிலை பின்புறம் உள்ள ஒரு ஓட்டல் அருகே செந்தில் என்ற சேனா இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்து பார்த்த இவரது சித்தப்பா மகனான மாயத்தேவர் மகன் செல்வம்(35). இது குறித்து தேனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கூலித்தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தேனி அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Theni ,Senthil ,Sena ,Veerana Thevar ,Compost Odai Street ,Theni Nagar ,
× RELATED ராஜபாளையத்தில் நாளை மின்தடை