×

டூவீலர் மீது டிராக்டர் மோதி பேன்சி கடை ஊழியர் பலி

பழநி, பிப். 4: பழநி அருகேயுள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45). பழநி அடிவாரத்தில் உள்ள பேன்சி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பழநி-பாலசமுத்திரம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Palani ,Ramesh ,Balasamudram ,Palani-Balasamudram ,
× RELATED ராஜபாளையத்தில் நாளை மின்தடை