* பிரதமர் மோடி அவைக்கு வந்ததும் பாஜ எம்பிக்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’, ‘ஹர ஹர மகாதேவ்’ என கோஷமிட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘அரசியலமைப்பு வாழ்க’ (ஜெய் சம்விதான்) என முழங்கினர்.
* நிதி அமைச்சகத்தின் புதிய அலுவலகமான கடமை பவனில் தயாரிக்கப்பட்ட முதல் பட்ஜெட் இது.
* பட்ஜெட்டில் பெரியதாக எந்த சலுகையும், திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், நிதி அமைச்சர் உரையாற்றும்போது, ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் பாஜ எம்பிக்கள் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். எதற்காக அவர்கள் ஆரவாரம் செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியவில்லை என எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறினர்.
* இம்முறை பட்ஜெட்டில் எந்த இடத்திலும் திருக்குறள் பற்றியோ, தமிழ் பழமொழிகள் பற்றியோ எதையும் நிதி அமைச்சர் குறிப்பிடவில்லை.
* பட்ஜெட் உரை முடிவில், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள், தங்கள் மாநிலம் நிதி அமைச்சரால் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக எழுந்து நின்று கோஷமிட்டனர். இதற்கு பதிலளித்த நிர்மலா, ‘‘ மோடி தலைமையிலான அரசு தயக்கத்திற்கு பதிலாக உறுதியான செயலையும், வார்த்தை ஜாலங்களுக்கு பதிலாக சீர்த்திருத்தத்தையும், மக்கள் செல்வாக்கிற்கு பதிலாக மக்கள் நலனையும் தேர்ந்தெடுத்துள்ளது’’ என்றார்.
