×

உபிக்கு ரூ.2.69 லட்சம் கோடி தமிழகத்துக்கு ரூ.62,530 கோடி வரி பகிர்விலும் தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை

ஒன்றிய பட்ஜெட் இணைப்பு ஆவணங்களில் வரும் 2026-27ம் நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான வரி பகிர்வு அட்டவணை இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் உத்தரப் பிரதேசம் ரூ.2.69 லட்சம் கோடி பெறுகிறது. தமிழ்நாடு பெறுவது ரூ.62,530 கோடி. உத்தரப் பிரதேசம் மட்டும் தமிழ்நாட்டை விட நான்கு மடங்குக்கும் அதிகமாக பெறுகிறது என்பதற்கு, அது பாஜ ஆளும் மாநிலம், தமிழ்நாடு திராவிட மாடல் அரசாங்கம் நடக்கும் மாநிலம் என்பது தவிர வேறென்ன இருக்க முடியும்.

அதிகமாக நிதி பெறும் மாநிலங்களில் பெரும்பாலானவை பாஜ ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், அரியானா, அசாம். அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், தேசிய வருவாயில் பெரும் பங்கு செலுத்தினாலும், வரி வருவாய் பகிர்வில் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. நிதிக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு என்று ஒன்றிய அரசு சால்ஜாப்பு சொல்கிறது.

ஆனால், தமிழ்நாடு வரி வசூலில் முன்னணி மாநிலம். கல்வி, சுகாதாரம், மக்கள் தொகை கட்டுப்பாடு போன்ற துறைகளில் தேசிய சராசரியை விட முன்னேறிய மாநிலம். இதற்கு கிடைத்த பரிசுதான், குறைந்த நிதி பகிர்வு. இதே நிலைதான் மற்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும். வளர்ச்சியை உருவாக்கும் மாநிலங்களை நிதி ரீதியாக தொடர்ந்து தண்டிக்கும் ஓரவஞ்சனை போக்கு இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தை மெதுவாக பலவீனப்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திற்கு ரூ. 9,885.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஐடிஐ-கள் மூலம் பிரதம மந்திரி திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாற்றம் திட்டத்திற்கு ரூ. 6,140.50 கோடி.
* 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முதன்மை முயற்சியான உள்ளடக்க உருவாக்குநர் ஆய்வகங்களை அமைக்க ரூ. 4,551.94 கோடி
* விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நிதி 3 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ. 9,964.40 கோடி
* உள்நாட்டு மீன்வளத்திற்காக 500 நீர்த்தேக்கங்களை மேம்படுத்த ரூ. 2,500 கோடி.
* கடலோரப் பகுதிகளில் தென்னை, சந்தனம், கோகோ மற்றும் முந்திரி மரங்களை பராமரிக்க ரூ. 350 கோடி.

மாநிலங்களுக்கான நிதி பகிர்வு
வரிசை மாநிலம் மொத்த ஒதுக்கீடு (ரூ கோடி)
1 உத்தரப் பிரதேசம் 2,68,910
2 பீகார் 1,51,831
3 மத்தியப் பிரதேசம் 1,12,133
4 மேற்கு வங்காளம் 1,10,119
5 மகாராஷ்டிரா 98,306
6 ராஜஸ்தான் 90,445
7 ஒடிசா 67,460
8 ஆந்திரப் பிரதேசம் 64,362
9 கர்நாடகா 63,049
10 தமிழ்நாடு 62,530
11 குஜராத் 57,310
12 ஜார்கண்ட் 51,236
13 சத்தீஸ்கர் 50,427
14 அசாம் 49,725
15 கேரளா 36,355
16 தெலங்கானா 33,180
17 பஞ்சாப் 30,464
18 ஹரியானா 20,772
19 அருணாசலப் பிரதேசம் 20,665
20 உத்தரகாண்ட் 17,414
21 ஹிமாசலப் பிரதேசம் 13,949
22 திரிபுரா 9,783
23 மேகாலயா 9,630
24 மணிப்பூர் 9,554
25 மிசோரம் 8,608
26 நாகாலாந்து 7,341
27 கோவா 5,570
28 சிக்கிம் 5,112

Tags : UP ,Tamil Nadu ,Union Budget ,Uttar Pradesh ,Tamil Nadu… ,
× RELATED தேர்தல் நேரமாக இருந்தும் கூட...