புதுடெல்லி: ஜனவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6.2 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “ஜனவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6.2 சதவீதம் உயர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் அதிகபட்சமாக ரூ.1.93 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் மொத்த வரி வசூல் 4.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.41. லட்சம் கோடியாகவும், இறக்குமதி வருவாய் 10.1 சதவீதம் அதிகரித்து ரூ.52,253 கோடியாகவும் இருந்தது.
