×

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அதிமுக ரவுசு: இந்தாங்க ஹாட்பாக்ஸ் எங்களுக்கு போடுங்க ஓட்டு

தஞ்சாவூர்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் தஞ்சாவூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் மேளதாளங்களுடன் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களுடன் தஞ்சாவூர் வடக்கு வாசல் 6வது வார்டு பகுதியிலிருந்து தொடங்கி ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாக சென்று அதிமுக சாதனை விளக்கங்கள் எடுத்து சொல்லியும், பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், கான்கிரீட் வீடு கட்டித்தருவோம் என்று கூறியும், அந்த துண்டு பிரசுரத்துடன் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உருப்படங்கள் அச்சிடப்பட்டு அந்த துணி பையில் ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தஞ்சாவூரில் அதிமுக சார்பில் பரிசுப்பொருட்கள் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : AIADMK ,Thanjavur ,Tamil Nadu ,Thanjavur North Gate ,
× RELATED ஆசை இருக்கலாம் ஆனா… இது பேராசை