×

இலை பழம் குக்கர்: மல்லுக்கட்டு

ராணிப்பேட்டை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் விறு, விறுப்படைய தொடங்கியுள்ளது. கட்சிகளுக்கிடையேயான கூட்டணிகளும், கூட்டணி பேச்சுவார்தைகளும் மும்முரமாக நடந்துவருகிறது. இதில், சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் கூட்டணி கட்சிகளுக்குள்ளாகவே ஜல்லிக்கட்டு போட்டி போல, சீட்டு கேட்டு மல்லுக்கட்டு நிலவத்தொடங்கிவிட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் 1,10,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் பாமக வேட்பாளர் 83,530 வாக்குகள் பெற்றார். அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் 12,979 வாக்குகள் பெற்றிருந்தார். 26,698 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம் வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த என்.ஜி.பார்த்திபன் இந்த முறை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு சோளிங்கர் தொகுதி சீட் வாங்கிவிட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதேசமயம், சோளிங்கர் தொகுதியை இந்த முறை அதிமுகவிற்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று நேர்காணலிலேயே இலை கட்சிக்காரர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர். அதிமுகவில், ஏற்கனவே எம்பி தேர்தலில் நின்று தோல்வியடைந்த ஏ.எல்.விஜயன் இந்தமுறை எப்படியும் சோளிங்கர் எம்எல்ஏ ஆகிவிடவேண்டும் என்ற கனவில் சீட்டு கேட்டு வருகிறாராம். அதேபோல் முன்னாள் எம்எல்ஏவான சம்பத்தும் அதிமுகவில் சீட் கேட்டு காய்நகர்த்தி வருகிறார்.

இந்த போட்டிகளுக்கு மத்தியில், இதே கூட்டணியில் உள்ள அன்புமணி டீம் பாமகவை சேர்ந்த மாவட்ட செயலாளரான சரவணன் என்பவர் கூட்டணி கட்சியான எங்களுக்கு சீட்டு ஒதுக்க வேண்டும் என்று மல்லுக்கட்டி வருகிறார். இப்படி ஒரு தொகுதியை 4 பேர் கேட்டு போட்டி போட்டு வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்றால் கூட்டணியே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில, தேமுதிகவைச் சேர்ந்த பிரமுகரும் சீட்டு கேட்க தயராகி வர்றாராம். தேமுதிக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.மனோகரன் என்பவரும், கூட்டணி உறுதி செய்த பின்னாடி, சோளிங்கர் தொகுதி சீட்டு பெற்றே ஆகவேண்டும்னு தீவிர ஆலோசனையில இருக்குறாராம். இப்படி ஒரே கூட்டணிக்குள்ள 3 பேரு மல்லுக்கட்டி வர்றாங்க. சீட்டு வாங்க எல்லாரும், எல்லா வேலைகளையும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.

Tags : Mallukattu ,Ranipet ,Tamil Nadu Assembly ,Sholingar ,Assembly ,jallikattu ,Ranipet… ,
× RELATED ஆசை இருக்கலாம் ஆனா… இது பேராசை