×

தே.ஜ. கூட்டணியில் 10 சீட் கேட்டுள்ளோம்: ஜான்பாண்டியன் ‘கெத்து’

வேலூர்: சட்டமன்ற தேர்தலில் தே.ஜ. கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டு பேசி வருகிறோம் என வேலூரில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ‘வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம், உருவாகட்டும் சமத்துவம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், 10 தொகுதிகள் கேட்டுள்ளோம். இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணியில், மிரட்டி யாரையும் பணிய வைக்க முடியாது. அன்பால் பேசி தான் பணிய வைக்க முடியும். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அதிக சலுகை மற்றும் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா? அல்லது கூட்டணி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுமா என்பதை செயற்குழுவில் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tea. J. ,SEAT ,Janpandian ,Vellore ,Te. J. ,Tammuka ,Tamil People's Development Corporation ,Exit, Create ,
× RELATED ஆசை இருக்கலாம் ஆனா… இது பேராசை