×

கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; விரைவில் முடிவு அறிவிக்கப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம்: கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாமக சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பெற்றார். இதையடுத்து அதற்கான நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான முதற்கட்டமான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.

இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கூறியதாவது; கூட்டணி தொடர்பாக தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினோம், நடத்தி வருகிறோம். இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகம் இருக்கிறது. பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட 4,109 பேர் விருப்பமனுக்களை கொடுத்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் தேர்தலில் செலவு செய்ய போதுமான பணம் உள்ளதா எனவும் எந்தக் கூட்டணியாக இருந்தாலும் போட்டியிடத் தயாரா எனவும் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ramadas ,Bamaka ,Viluppuram ,Ramdas Thailapuram ,Palamaka ,Thailapuram Dhatta ,
× RELATED ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும்...