×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதி நொடிகளில் கோல் அதிர வைத்த பென்ஃபிகா

லிஸ்பன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை, 4-2 என்ற கோல் கணக்கில் பென்ஃபிகா அணி வீழ்த்தி, பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் முன்னணி அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் லிஸ்பனில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை, பென்ஃபிகா அணி எதிர்கொண்டது. துவக்கத்தில் அட்டகாசமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாபே, 30வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பென்ஃபிகா அணியின் ஆண்ட்ரீயாஸ் ஷெடரப், 36 மற்றும் 54வது நிமிடங்களில் இரு கோல்கள் போட்டு கரவொலி பெற்றார்.

முதல் பாதி முடிவில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பென்ஃபிகா அணியின் வாங்கலிஸ் பாவிடிஸ் அணியின் 3வது கோல் போட்டு முன்னிலைப் படுத்தினார். 58வது நிமிடத்தில் ரியல் மாட்ரிடின் எம்பாபே மேலும் ஒரு கோல் போட்டார். பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க, 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டயாத்தில் பென்ஃபிகா அணி போராடியது. போட்டியின் கடைசியில் 90+8வது நிமிடத்தில் அந்த அணியின் அனடோலி ட்ருபின் அட்டகாசமாக கோல் போட்டார். அதன் பின் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், 4-2 என்ற கோல் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த பென்ஃபிகா அணியினர், பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்தனர்.

Tags : Champions League football ,Benfica ,Lisbon ,Champions League ,Real Madrid ,European ,Union ,
× RELATED மரியாதை, ஆதரவில்லாததால் கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை