×

டாடா மாஸ்டர்ஸ் செஸ்: பத்தாம் சுற்றில் கெத்தாக வென்ற குகேஷ்

விஜ்ஆன்ஸீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் 10வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், துருக்கியை சேர்ந்த 14 வயது கிராண்ட் மாஸ்டரை வெற்றி கண்டார். நெதர்லாந்தின் விஜ்ஆன்ஸீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. முந்தைய போட்டிகளில் அதிர்ச்சித் தோல்விகளை சந்தித்து வரும் தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் 10வது சுற்றுப் போட்டியில் துருக்கியை சேர்ந்த 14 வயது இளம் கிராண்ட் மாஸ்டர் யாகிஸ் கான் எர்டோக்மஸ் உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குகேஷ் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். இதையடுத்து, 10 சுற்றுகள் முடிவில் அவர் 5 புள்ளிகள் பெற்றுள்ளார். அடுத்த 3 சுற்றுகளில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் குகேஷ் உள்ளார்.

மற்றொரு 10வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஹான்ஸ் நீமான் உடன் நடந்த போட்டியில் டிரா செய்தார். இன்னொரு போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, ஜெர்மன் கிராண்ட் மாஸ்டர் வின்சென்ட் கீமரிடம் தோல்வியை தழுவினார். 10 சுற்றுகள் முடிவில், ஜெர்மன் வீரர் மாத்தியாஸ் புளுபாம், உஸ்பெகிஸ்தான் வீரர்கள் ஜவோகிர் சிண்டாரோ, நோடிர்பெக் அப்துஸட்டோரோ தலா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமான், துருக்கி வீரர் யாகிஸ் கான் தலா 5.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர். 3ம் இடத்தில் உள்ள குகேஷ் 5 புள்ளிகள் பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஸ்லோவேனிய வீரர் விளாடிமிர் பெடோசீவ் 4.5 புள்ளிகளுடன் உள்ளனர்.

Tags : Tata Masters ,Kukesh ,Wijnsee ,Tamil Nadu ,Turkey ,Tata Steel ,Masters ,Tata Steel Masters Chess Tournament ,Wijnsee, Netherlands… ,
× RELATED மரியாதை, ஆதரவில்லாததால் கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை