×

20 கோடி லட்டுகளை ஸ்லோ பாய்சன் போன்று பக்தர்கள் சாப்பிட்டுள்ளனர்; அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு!

 

திருமலை: திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, உறுப்பினர்கள் பானு பிரகாஷ் ரெட்டி, பனபாக லட்சுமி, திவாகர் ரெட்டி ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் பேசிய பி ஆர் நாயுடு கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பெறப்பட்ட நெய் 100 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டது. விலங்குகள் கொழுப்பு இல்லை என சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக கூறி ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தற்போது கொண்டாடி யாகம் நடத்திய வருகின்றனர். அவர்கள் ஆட்சியில் பல இந்து கடவுள்கள் மற்றும் பக்தர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டதோடு பல தாக்குதல்களும் நடத்தினர். அதன் ஒரு கட்டமாகவே தேவஸ்தானத்தில் டெண்டர் முறையை மாற்றி நிபந்தனைகளை மீறி யாரோ ஒருவர் பலனடைவதற்காக தேவஸ்தான கொள்முதல் நிபந்தனைகளை மாற்றம் செய்துள்ளனர். இதனால் 60 லட்சம் கிலோ ரூ 250 கோடி மதிப்புள்ள கலப்பட ( அபாயகரமான இரசாயனம் கலந்த ) ஸ்லோ பாய்சன் போன்ற நெய்யை பெற்று 20 கோடி லட்டுகள் தயார் செய்யப்பட்டது.

இதனை தேசிய பால்வள வாரியத்தின் ஆய்வகத்தில் சோதனை மேற்கொண்டதில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர், துணை முதல்வர், பல மடாதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் கலப்படம் செய்யப்படவில்லை என கூறவில்லை. ஆனால் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சிபிஐ கிளீன் சீட் ( எந்த தவறும் நடைபெறவில்லை ) என வழங்கியதாக கூறி வருகின்றனர். நெய் சப்ளை செய்த போலோ பாபா நிறுவனத்தில் ஒரு மாடு, ஒரு லிட்டர் பால் , வெண்ணை கூட இல்லாமல் எப்படி நெய் தயாரிக்கப்பட்டு இருக்கும். நெய் மட்டுமல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முறைகேடுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஆட்சியில் போலோ பாபா நிறுவனத்திற்கு சென்ற தேவஸ்தான நிபுணர்கள் குழுவினர் குழு சில ஆட்சேபனைகளை தெரிவித்தால் அதனை கண்டு கொள்ளாமல் டெண்டர் வழங்க வேண்டும் என அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியின் மெயில் அனுப்பி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இது ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டிக்கு தெரியாமலே அவரது உதவியாளர் சின்னஅப்பன்னா மெயில் அனுப்பி ரூ 250 கோடிக்கு நெய் கொள்முதல் செய்யப்பட்டதா ? சுப்பா ரெட்டியின் வங்கி கணக்குகளை வழங்கும்படி சிபிஐ கேட்டுக் கொண்டால் அவர்கள் அதனை வழங்காமல் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு சுப்பா ரெட்டியும் அவரது மனைவியும் நாடியுள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாடிகன் சிட்டியை மிஞ்சி உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக மாறியுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்துக்கள் மன நிலையை மாற்றும் மற்றும் பாதிக்கும் வகையில் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு சுவாமி என்றால் பக்தி, பயம் இல்லை. அவர்களுக்கு இந்துக்களை அழிக்க வேண்டும், மதமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அவர்கள் நாஸ்திகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எனவே இந்த நேரத்தில் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் செய்த தவறுக்கு தற்பொழுது யாகம் செய்கிறார்கள். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி செய்யும் யாகம் தொடர்ந்து பொய் பேசி வருவதால் எங்கு சீக்கிரமாக இறந்து விடுமோ என்ற அச்சத்தில் யாகம் நடத்தி வருகிறார்.

நெய் கொள்முதல் மூலம் சின்ன அப்பன்னா வங்கிக் கணக்கில் பலகோடி பணம் வந்துள்ளது. இந்த பணம் யாருக்கு சென்றது யார் இதனால் பயனடைந்தார்கள் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவர்கள் பின்னணியை சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் சரியாக கூறப்படவில்லை. சிபிஐ விசாரணையும் சரியாக நடைபெறவில்லை என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்திலும் எங்கள் தரப்பில் கூறப்படும். எதற்கெடுத்தாலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறுகிறார்கள். அனைத்து அதிகாரிகளையும் தங்கள் வசப்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். இதனால் தான் கடந்த 13 ஆண்டுகளாக சிபிஐ விசாரணை இருந்தும் ஜெகன்மோகன் ரெட்டி வெளியே இருந்து கொண்டு ஆட்சியை பிடித்து பல ஊழல்களை செய்து பல கோடி பணம் சம்பாதித்து அந்த பணத்தை வைத்து அனைவரையும் விலைக்கு வாங்கும் வகையில் செயல்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

 

Tags : P. R. Naidu ,Thirumalai ,Board of Trustees ,P R Naidu ,Banu Prakash Reddy ,Panabaga Lakshmi ,Divagar Reddy ,Tirupati Padmavati Guest House ,
× RELATED மிசோரம் பள்ளிகளில் இந்தி மொழி பேசும்...