×

ஆர்.புதுப்பட்டியில் சாலையோர புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

*சீரமைக்க வலியுறுத்தல்

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் சாலையோர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியிலிருந்து மெட்டாலா சாலை, நாமகிரிப்பேட்டை மற்றும் ராசிபுரம் சாலை ஆகிய முக்கிய போக்குவரத்து வழித்தடங்களின் ஓரங்களில் அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலைகளில் தினசரி அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களிலும், சாலையில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

மேலும், முட்புதர்கள் சாலையோரத்தை ஆக்கிரமித்து உள்ளதால், நடைபாதை முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. இதனால் டூவீலர்களில் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையோரங்களில் காணப்படும் முட்புதர்களை அகற்றி விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : R. Pudupatti ,Namagiripettai ,Metalla Road ,Rasipuram Road… ,
× RELATED அதிமுகவில் மீண்டும் இணைக்க முடியாது...