- திருவையாரு நகராட்சி கூட்டம்
- தஞ்சாவூர்
- திருவையாறு பேரூராட்சி
- துணை மேயர்
- நாகராஜன்
- ஆணையாளர்
- மதன்ராஜ்
- சரஸ்வதி
- முத்து முகமது
- சரவணன்
தஞ்சாவூர், ஜன.30: திருவையாறு நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் துணைத்தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் மதன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் மேலாளர் சரஸ்வதி, சுகாதார ஆய்வாளர் முத்து முகமது, பொறியாளர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
பழைய சுகாதார கழிவறைக்கு பதிலாக புதிய சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும், பாதைக்கு இடையூறாக உள்ள கருங்கல்லை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும், அய்யாசாமி நகர் பகுதிக்கு கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும், குடிநீர் பைப்லைன் அமைத்து தர வேண்டும், கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆணையர் மதன்ராஜ் பதிலளித்து பேசுகையில்: சாலை சீரமைக்கவும், புதிய கழிவறை கட்டுவதற்கும், கழிவுநீர் வடிகால் பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
