×

வரும் 3ம் தேதி தியாகிகள் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம்

புதுக்கோட்டை, ஜன. 30: தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றல்களின் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 3ம் தேதி நடக்க இருப்பதாக கலெ க்டர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளின் வழிதோன்றல்கள் தங்களது குறைகளை தெரிவிக்க ஏதுவாக ‘தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றல்களின் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 3.2.2026 காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே, புதுக்கோ ட்டை மாவட்டம், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளின் வழிதோன்றல்கள் ‘தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றல்களின் குறைகேட்பு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாமென கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

 

Tags : Pudukkottai ,Pudukkottai district ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு