×

விதிமுறைகளை பின்பற்றாத சாய ஆலைகளுக்கு நோட்டீஸ்

பள்ளிபாளையம், ஜன.30: பாதுகாப்பு உபகரணங்கள், தொழிற்சாலை விதிமுறைகளை பின்பற்றாத 4 சாய ஆலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியது. பள்ளிபாளையம் பகுதியில், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுசூழல் பொறியாளர் செல்வகணபதி நேற்று மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டார். இதில் சாய ஆலைகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பான அளவு, இறுதி நிலை திடக்கழிவு, ராசயனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 4 ஆலைகளில் இறுதி நிலை திடக்கழிவுகள் பாதுகாப்பற்ற நிலையில் கொட்டப்பட்டு கிடந்தது. மேலும், பிளீச்சிங் வாட்டர் தொட்டிகள் முறையான பாதுகாப்பு இல்லாமல் காற்றில் கலந்து மாசு ஏற்படுத்தியது தெரிய வந்தது. இது போலவே ரசாயனம் குறித்து முறையான பதிவேடுகள் இல்லை. இது குறித்து ஆலை நிர்வாகிகள் எச்சரிக்கை செய்த சுற்றுச்சூழல் பொறியாளர், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார். குறைபாடுகளை ஒருவார காலத்தில் சரி செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Pallipalayam ,Pollution Control Board ,Environmental Engineer ,Selvaganapathy ,
× RELATED ஏரிக்கரையில் திடீர் தீயால் புகைமூட்டம் போராடி அணைப்பு