×

அரசு, தனியார் கட்டிடங்களில் கட்சி விளம்பரங்களை அகற்ற உத்தரவு

 

நாமக்கல், மார்ச் 16 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், வரும் 30ம் தேதி துவங்குகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட எஸ்பி விமலா முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை வகித்து, கலெக்டர் துர்காமூர்த்தி பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் 72 மணி நேரத்திற்குள் அமல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றிடவேண்டும்.

Tags : Namakkal ,Tamil Nadu ,Election Commission ,Namakkal District ,
× RELATED ரூ.2 கோடியில் சாலை பணிகள்