×

மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

 

நாமக்கல், மார்ச்16: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கு நாள் கூட்டம், தேர்தல் முடியும் வரை நடைபெறாது. இதுபோல கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த அனைத்து குறைதீர் கூட்டங்களும், தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை நடைபெறாது. இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்

Tags : Namakkal ,Public Grievance Redressal Day ,Namakkal District Collector ,Namakkal District ,Collector ,Durgamoorthy… ,
× RELATED ரூ.2 கோடியில் சாலை பணிகள்