சுகாதார ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜன. 30: திண்டுக்கல் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் நேற்று துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி  மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.   தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் குருநாதன் விளக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் முருகன், மண்டலச் செயலாளர் நல்லேந்திரன் உட்பட 40க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், 246 சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு மேம்பாடு வழங்கப்படவேண்டும். 14 ஆண்டுகள் தாமதமாக பணி நியமனம் செய்யப்பட்ட 750 சுகாதார ஆய்வாளர்களை பழைய ஓய்வூதியத்தில் சேர்க்க வேண்டும். கொரோனா பணியில் தனது உயிரை துச்சமென மதித்து பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர் நிலை 2 பிரிவினருக்கு சுகாதார ஆய்வாளர் நிலை 1 பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜெயக்குமார்  நன்றி கூறினார்.

Related Stories: