×

மாநில அளவில் சிலம்பம்: பள்ளி மாணவி சாதனை

கமுதி, ஜன.30: கமுதி கேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். கமுதி கேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி அனுஷ்கா தேனியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், ஒற்றை கம்பு பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பள்ளி நிர்வாக குழு சார்பில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி நிர்வாக குழு செயலர் சங்கர் தலைமை தாங்கி, மாணவி அனுஷ்காவை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ்பாண்டியன், பொருளாளர் சரவணன், உறுப்பினர் ஜெகன் மற்றும் க்ஷத்திரிய நாடார் உறவின்முறை டிரஸ்டிகள், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார்.

Tags : Silambam ,Kamudi ,Kamudi KN Girls Higher Secondary School ,Anushka ,School Education Department ,Theni ,
× RELATED காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தெப்போற்சவம்