மதுரை: ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி, மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி கடந்த 2017ல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் சார்பில் தீவிர போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, மாஜிஸ்திரேட் பாக்யராஜ் முன்பாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகிலன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தார்.
