×

பாபநாசம் ஒன்றியத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊராட்சி செயலருக்கு நற்சான்றிதழ்

தஞ்சாவூர், ஜன.29: பாபநாசம் ஒன்றியத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊராட்சி செயலாளருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கூனஞ்சேரி ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊராட்சி செயலாளர் மணிகண்டனுக்கு தஞ்சையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட ஆட்சித் தலைவரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

Tags : Panchayat ,Papanasam Union ,Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Panchayat Secretary ,Manikandan ,Koonancheri Panchayat ,Republic Day ,Thanjavur… ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு