- அறந்தாங்கி பேருந்து
- அறந்தாங்கி
- அறந்தாங்கி பேரூராட்சி
- புதுக்கோட்டை மாவட்டம்
- அறந்தாங்கி அரசு பேருந்து நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அறந்தாங்கி பேருந்து நிலையம்
அறந்தாங்கி, ஜன.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி அரசு பணிமணையில் இருந்து நாள்தோறும் நூற்று கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. ஆயிரகணக்கான பயனிகள் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்க்கு வந்து போகின்றனர்.
இப்படி அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்க்கு வரும் பயணிகளிடம் 5 வயது முதல் 6 வயது வரை உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா சிறுமிகள் உதவி கேட்டு (காசு கேட்டு) தொந்தரவு செய்து வருகின்றனர். அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றனர். இப்படி பள்ளி செல்லா குழந்தைகளையும் தேவை இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் சுற்றி திரிந்து காசு கேட்கும் குழந்தைகளை கட்டுபடுத்த வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களில் பஸ் ஸ்டாண்டு வந்து விடுகிறது. இதனால் பள்ளி செல்லா குழந்தைகளை அழைத்து பள்ளிக்கு செல்ல அறிவுறுத்வேண்டும். அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் சுற்றிதிரியும் குழந்தைகளை கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
