ராமநாதபுரம்.ஜன.29: ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு பெட்டிக்கடை, டீக்கடைகள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை கடைகளும், வர்த்தக நிறுவனங்களும், தொடக்கப்ப ள்ளி முதல் மருத்துவக் கல்லூரி வரை கல்வி நிறுவனங்களும் உள்ளன. இதுபோன்று அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. மாவட்ட தலைநகராக இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர். இதுபோன்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராமேஸ்வரம், திருஉத்தரகோசமங்கை, தேவிபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அனைத்து தெருக்கள், பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிகிறது. முக்கிய பகுதியான அரண்மனை சன்னதி தெரு பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இதனால் அந்த பகுதியில் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள்,கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர். பெரும்பாலான நாய்கள் தோல் உறிந்து நோய் தாக்குதல் உட்பட்டு திரிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் தெருக்களில் விளையாடும் குழந்தைகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பெண்கள் வீதி அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்தவும் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
