×

இந்தியர் இல்லை என்பதால் இலங்கை அகதியை பணி நீக்கம் செய்த வங்கி உத்தரவு ரத்து

சென்னை: சிறுவயதிலேயே இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாடு வந்த திருக்கல்யாணமலர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு எஸ்பிஐ வங்கியில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது விண்ணப்பத்தில் குடியுரிமை தொடர்பாக எந்த விவரங்களும் கேட்கப்படாத நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பணி நீக்கத்தை எதிர்த்து திருக்கல்யாணமலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர், மனுதாரர் பணியில் சேரும்போது இலங்கை அகதி என்பதை மறைக்கவில்லை. 17 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் தற்போது பணி நீக்கம் செய்துள்ளதை ஏற்கமுடியாது, இது அவரின் குடும்பத்தினரையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட சில உரிமைகளை தவிர, வாழ்வுரிமை அடிப்படையில் இந்திய குடிமக்களுக்கு இணையாக அதிகளாக வந்தோரும் உரிமை கோரலாம் எனக்கூறி பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Chennai ,Thirukalyanamalar ,Tamil Nadu ,Sri Lanka ,SBI Bank ,
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு