சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. தனியார் கல்லூரியில் பிசிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஆண் நண்பருடன் எடுத்த போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் வைத்திருந்தார். அதை ஒரு மாணவி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து கல்லூரி அலுவலக உதவியாளர் மணிமாறனுக்கு அனுப்பியுள்ளார்.
அவர் அதை கல்லூரி முதல்வருக்கு அனுப்பவே அவர், மாணவியை கண்டித்தார். இதனால் மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கல்லூரி முதல்வர் அசோக், அலுவலக உதவியாளர் மணிமாறனை கைது செய்தனர்.
