சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்திய இரு பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்குள் மறைத்து எடுக்கப்பட்டு வந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
