சென்னை: எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறல் குறித்து குரல் எழுப்பினோம் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி திட்டத்தை கொண்டு வந்ததை எதிர்த்தும் குரல் எழுப்பினோம். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார்.
