×

கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் பலி

நீடாமங்கலம். ஜன.28: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் புதுத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தேவி. இவர்களது மகன் நவீன்(7). நவீன் மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது கீரிப்பிள்ளை ஒன்று இவனது வலது கட்டை விரலை கடித்துள்ளது. இதில் லேசான காயம் இருந்ததால் ஆஸ்பத்திரியில் சேர்த்து டாக்டரிடம் காண்பிக்காமல் இவர்களாகவே தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் இருந்ததால் சிறுவனை அவனது பெற்றோர்கள் திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனின் உடலில் ஆபத்தான வைரஸ் பரவியிருந்தால் அவனை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நவீன் உயிரிழந்தான். சிறுவனின் உடலை சுகாதாரத் துறையினர் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Needamangalam ,Muthu ,Ammaiyappan Pudutheru ,Koratachcheri ,Tiruvarur district ,Devi ,Naveen ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு