தஞ்சாவூர், ஜன.28: பாபநாசம் சன்னதி தெருவில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் செயலாளர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் மோகன் வரவேற்று பேசினார். விழாவில், பேராசிரியர் உமா மகேஸ்வரி கலந்துகொண்டு உலக இலக்கியத்தில் கிழக்கும், மேற்கும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த விழாவில் ஓய்வு பெற்ற மாவட்ட கருவூல அலுவலர் அன்பழகன், நிர்வாகிகள் அசோக், ஜெயராமன், செங்கதிர்செல்வன்,
ராஜேந்திரன், உலகநாதன், கலைச்செல்வன், பாண்டியன், கோடையடி, குருசாமி, வசந்தகுமார், சுரேஷ், தில்லைநாயகி, சம்மந்தம், மருத்துவர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பேரவை தலைவர் துரையரசன் நன்றி கூறினார்.பாபநாசம் சன்னதி தெருவில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் செயலாளர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது.
