நியூயார்க்: அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்புயல் வீசி வருகிறது. ஆர்கன்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்து வரை 2,100 கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு அடிக்கு மேல் ஆழமான பனி படர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து அடியோடு முடங்கி விட்டது. சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள். குளிருக்கு மேலும் 8 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 30 ஆனது.
