×

கனடா பிரதமரைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் இன்று சீனா செல்கிறார்: அதிபர் டிரம்பின் கோபத்திற்கு ஆளாவாரா?

லண்டன்: அதிபர் டிரம்பின் வரி விதிப்பு, கிரீன்லாந்து விவகாரம் போன்றவற்றால் அமெரிக்காவுக்கு நெருக்கமான நட்பு நாடுகளே பகையாளிகளாக மாறி வருகின்றன. சமீபத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னிக் சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டார். இதற்கு பிரதிபலனாக கனடாவுக்கு 100 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்நிலையில், கார்னிக்கை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் இன்று தனது சீனா பயணத்தை தொடங்குகிறார். சீன தொழில்நுட்பம், முதலீடுகளை ஈர்க்க ஸ்டார்மர் சீனா செல்கிறார்.

ஸ்டார்மர் அரசு, உறுதி அளித்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கும், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை செலவு நெருக்கடிகளை தணிப்பதற்கும் மிகவும் போராடி வருகிறது. இதை சமாளிக்க சீனாவின் தயவை ஸ்டார்மர் நாட உள்ளார். அதே சமயம், சமீபத்தில் கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்பை கண்டித்த ஸ்டார்மர், ஆப்கான் போரில் உயிர் தியாகம் செய்த இங்கிலாந்து வீரர்களை டிரம்ப் உதாசினப்படுத்தி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சூழலில் ஸ்டார்மர் சீனா செல்வதால் அவரும் அதிபர் டிரம்பின் கோபத்திற்கு ஆளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்மரை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் அடுத்த மாதம் சீனா செல்வது குறிப்பிடத்தக்கது.

Tags : UK ,CHINA ,CANADA ,CHANCELLOR ,TRUMP ,London ,America ,President ,Greenland ,Mark Carnick ,Xi Jinping ,
× RELATED ‘ஸ்பைடர்மேன்’ படத்துக்கு குரல்...