- சேலம்
- கொர்னம்பிகை
- உத்தனுரா சுகவனேஸ்வரர்
- சர்க்கரை முனி
- பிரம்மன்
- பிரம்மதேவ்னா
- சர்க்கரை
- சரஸ்வதி தேவி
- பிரம்மா
பிரம்மதேவன் படைப்பில் உள்ள ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது என்ற ரகசியத்தை பிரம்மன் சொல்ல அதை கேட்டுக் கொண்டு இருந்தவர்களில் சுகர் முனிவரும் ஒருவர் ஆவார். ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது. ஆனால், சுகர் இந்த ரகசியத்தை சரஸ்வதி தேவியிடம் கூறிவிட்டார். இதை பிரம்மா சுகர் முனிவரை கிளியாகக் கடவது என்று கூறி, சிவபெருமானை வணங்கினால் சாப விமோசனம் உண்டு என கூறிவிட்டார். சுகர் முனிவரும் எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளியாக வனத்தில் இருந்த சிவபெருமானை வழிபட்டு வந்தார். அச்சமயம் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க அந்த கிளிகள் எல்லாம் புற்றின் மேல் பதுங்கவே, புற்றையும் இடித்தான் கிளிகள் எல்லாம் இறந்தன. அப்போது சுயம்பு மூர்த்தியான சிவபெருமானை காத்து இருந்தார் சுகர் (முனிவர்) அவரையும் வெட்ட ரத்தம் பீறிட்டது. முனிவரும் சிவலோகப் பதவியடைய சுயம்பு வடிவான சிவனின் மேனியில் ரத்தம் வடிந்தது. சுகர் வழிபட்ட வனத்தில் இருந்த ஈஸ்வரன் ஆகையால் சுகவனேஸ்வரர் என்ற நாமத்துடன் காட்சியளிக்கிறார்.
ேவடனால் வெட்டப்பட்ட தழும்பு இன்னும் லிங்கத்தின் மீது உள்ளது. லிங்கமும் சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. ஒளவையார் ஒரு வளர்ப்புப் பெண்ணிற்கு திருமணம் செய்வித்தது. இந்த திருத்தலத்தில்தான். இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபடுவதால் சுகம் அடையலாம் என்பது ஐதீகமாக உள்ளது.இந்த திருக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை அருணகிரி நாதர் பாடியுள்ளார் என்பது இன்னும் சிறப்பு.வழிபடுபவர்களுக்கு சுகத்தை கொடுக்கும் தெய்வமாக இந்த சுகவனேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.இந்த தெய்வத்திற்கு சூரியன், புதன், சனி, வியாழன் ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளது.
* சனி தோஷத்தாலே அல்லது கர்ம தோஷத்தாலோ பாதிக்கப்பட்டு சுகத்தை இழந்து நோய்வாய்பட்டு கஷ்டப்படு பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் வியாதி நீங்க நல்ல மாற்றம் உண்டாகும்.
* வண்டி, வாகனங்களில் அடிக்கடி பிரச்னை உள்ளவர்களும், தங்கள் வாகனத்தின் சாவியை இறைவனிடம் சமர்பித்து அர்ச்சனை செய்து கொள்பவர்களுக்கு நல்ல மாற்றத்தை தருவார்.
* படிப்பில் மந்தமாகும் குழந்தைகள், பிறப்பு ஜாதகத்தில் 4ம் பாவகத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் வழிகாட்டுவார் சுகவனேஸ்வரர்.
* யாருக்கேனும் நிலப் பிரச்னை, சொத்து பிரச்னை, பூர்வீக சொத்தில் பங்காளிகள் தகராறு, நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளில் பிரச்னை உள்ளவர்களும் இங்கு வழிபட்டு சென்றால் வெற்றி மற்றும் நல்ல தீர்வுகள் உண்டாகும்.
* சிலருக்கு 7ம் பாவகத்தில் சனி அமர்ந்து திருமணம் தாமதமாகும் அமைப்புகள் இருக்கும். அவர்கள் இங்குள்ள பெருமானை சனிக்கிழமை அன்று வஸ்திரம் கொடுத்து அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட்டு சென்றால் விரைவாக சுபகாரியங்கள் நடக்க ஏதுவாகும்.
* ஜாதகத்தில் வியாழன் – சனி சேர்க்கை ஏற்பட்டு சிலருக்கு உடல் உபாதைகள் அதாவது ரத்தசோகை போன்ற வியாதிகள் மற்றும் வீட்டில் மாற்றுத்திருமணம் நடந்தவர்களும் இங்கு வழிபட்டால் நல்ல மாற்றம் உண்டாகும்.
சுகவனேஸ்வரர் அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பவராக அருள்பாலிக்கிறார். சேலம் நகரில் மையத்தில் இருப்பதால் அனைவரும் எளிதாக சென்று வரலாம்.
