- அருள்மிகு குங்குமாவள்ளி சமீதா குலசேகர சுவாமி கோயில்
- ராஜகோபுரம் தர்ஷன்
- உடுமலைப்பேட்டை
- கனியூர்
- மடத்துக்குளம்
- திருப்பூர் மாவட்டம்
- விக்ரமா
ராஜகோபுர தரிசனம்!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து மடத்துக்குளம் வழியாக கணியூர் செல்லும் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. சாலையை ஒட்டி தென்னந்தோப்புக்கு இடையே இக்கோயில் உள்ளது. கிழக்கு முகமாக அமைக்கப்பட்டு, பழமை மாறாமல் விளங்கும் இத்திருக்கோயில், விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த, 1000 வருட பழமையான கோயில். மூலவர் குலசேகர சுவாமி, அம்பிகை, குங்குமவல்லி அம்மன்.
இக்கோயில் கருவறை 15க்கு 15 அடி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையை சுற்றிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கருவறையை ஒட்டி இடைநாழிகை, அடுத்தாற்போல் அர்த்த மண்டபம் நான்கு தூண்கள் சுவர்கள் ஒட்டிய அமைப்போடு காணப்படுகின்றது. பதினாறு தனி தூண்களும் மேலும், பல தூண்களை கொண்டு மகாமண்டமும் உள்ளது. மகாமண்டபத்தின் நடுவே நந்தி உள்ளது. நந்திக்கு முன்னும் பின்னும் பலிபீடம் உள்ளது. அர்த்த மண்டப நுழைவாயிலில், இரண்டு துவார பாலகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சிலையும், தெற்கு பக்கத்தில் ஒரு நுழைவாயிலும், வடக்கில் முருகன் சிலையும் உண்டு. இக்கோயில் கல்வெட்டுகளில், பிற்கால சோழர்கள் மற்றும் நாயக்கர் காலத்தில் வேண்டுதல் நிறைவேறி, அதற்கு நேர்த்திக்கடனாய் நிலங்கள், தானியங்கள் போன்றவற்றை மக்கள் தானமாக கொடுத்து வந்துள்ளனர். அந்த நேர்த்திக்கடன்களை இன்றும் மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
இங்கு 12ம் நூற்றாண்டில் கொங்கு சோழர் காலக் கலையின் அடையாளத்தினை காணமுடியும். கருவறையின் மேல் பகுதியில் பூதகணங்கள், யாழிவரி சிற்பங்களை காணலாம். கருவறையின் மேல் இரண்டு அடுக்குகள் கொண்ட விமானம் செங்கல் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் சோழர்களால் அமைக்கப்பட்டது. இந்த கல் கருவறை. இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை.
