×

ஓடும் காரில் திடீர் தீ 5 பேர் உயிர் தப்பினர்

*சேலத்தில் பரபரப்பு

சேலம் : சேலத்தில் நேற்றிரவு சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சேலம் அருகே சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் சக்திஅனீஷ்(32). இவர் ஓமலூரில் காபி கொட்டை அரைக்கும் இயந்திரம் மிஷன் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று மாலை, தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோரை காரில் அழைத்து கொண்டு, சேலம் 5 ரோட்டில் உள்ள எலக்டரானிக் ஷோரூமிற்கு வந்தார். அங்கு பொருட்களை வாங்கி கொண்டு, வீட்டிற்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

குரங்குசாவடி பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, கார் இன்ஜினில் இருந்து கரும் புகை வெளியே வந்தது. இதை பார்த்த சக்திஅனீஷ், காரை பெட்ரோல் பங்கை அருகே காரை நிறுத்தினார். பின்னர், காரில் இருந்த மனைவி, தாய், குழந்தை, சகோதரி ஆகியோர் காரில் இருந்து வேகமாக இறக்கி விட்டு சிறிது தள்ளி காரை நிறுத்தினார்.

அப்போது கார் இன்ஜினில் இருந்து வெளியே வந்த புகை திடீரென தீ பிடித்து, கார் முழுவதும் மளமளவென தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த அங்கிருந்த மக்கள் தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர், காரில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. காரில் இருந்து புகை வந்ததும், காரில் இருந்து உடனே இறங்கியதால் 5 பேர் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Salem ,Chittanur Bhubaneswari ,
× RELATED கொடிவேரி அணையில் குறைந்த தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்