×

முதலிபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

*ஆதார், வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைத்ததால் பரபரப்பு

திருப்பூர் : திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் செம்மாண்டம்பாளையம் சமுதாய நலக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கிராம மக்கள் கருப்பு உடை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

முதலிபாளையம் ஊராட்சி பகுதியில் மாநகராட்சியின் தரம் பிரிக்கப்படாத திடக்கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவுகளை கொட்டியதால் ஊராட்சியின் பூலோக அளவில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டு உள்ளது.

இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட பகுதியை சட்டப்பூர்வமாக பாதிக்கப்பட்ட பகுதி என இன்னமும் அறிவிக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் வழங்கவில்லை.

முதலிபாளையம் ஊராட்சி பகுதிக்கு உள்ளேயே இன்னும் திடக்கழிவு மேலாண்மை சரிவர செயல்படுத்தாமல் ஆங்காங்கே தரம் பிரிக்கப்படாத குப்பைகள் கொட்டுவதால் முதலிபாளையம் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது.

எனவே முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியை மாசுப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக கொண்டு வந்திருந்தனர்.

தங்கள் கோரிக்கையில் ஒரு மித்த குரலோடு இருப்பதாகவும், எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் கிராம சபைக்கூட்டத்தில் ஆவணங்களை ஒப்படைத்து செல்வதாக தெரிவித்தனர்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அலுவலர்களால் அறிவிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி முதலிபாளையம் கிராம சபைக்கூட்டம் 4வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Aadhar ,Tiruppur ,Tiruppur Mudalipalayam ,Uradachi Mantra ,Semmantampalayam Community Welfare Hall ,
× RELATED கொடிவேரி அணையில் குறைந்த தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்