- நக்சலைட்டுகள்
- சத்தீஸ்கர் காடு
- ராய்ப்பூர்
- சத்தீஸ்கர்
- கரேகுட்டா காடு
- பிஜப்பூர் மாவட்டம்
- மாவட்ட ரிசர்வ்…
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல்கள் வைத்த குண்டு வெடித்ததில் 11 வீரர்கள் காயமடைந்தனர். சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் கரேகுட்டா வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் வீரர்கள் அங்கு விரைந்தனர். மாவட்ட ரிசர்வ் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவினர் இணைந்து தீவிர நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் நக்சல்களால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடி வெடித்தது.
இதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களில் 10 பேர் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்தவர்கள். ஒருவர் கோப்ரா பிரிவை சேர்ந்தவர். காயமடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு சுமார் 21 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினார்கள். அப்போது 31 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
