- தஞ்சாவூர்
- இந்திய வெளிநாட்டு வங்கி
- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை
- அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- துணை ஜனாதிபதி
- யோகராஜ்
- ராஜீவ் காந்தி
தஞ்சாவூர், ஜன. 26:அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் யோகராஜ் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் போதுமான எழுத்தாளர்களை நியமிக்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப வேண்டும். க்யூ-ஆர் கோடு அடிப்படையிலான தனிநபர் கருத்து பெறும் முறையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
