×

2026 தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து மநீம தீர்மானம்

சென்னை : சென்னையில் மநீம அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2026 தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து மநீம தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்க காரணமாக இருந்த கமல், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேறியுள்ளது.

Tags : Election Working Committee ,2026 elections ,Chennai ,Kamal Hassan ,Manima Office ,Executive Committee ,People's Justice Mayam Party ,
× RELATED 2021-இல் நிர்ணயித்த இலக்கில்...