- சிபிஐ
- என்டிஏ
- எடப்பாடி
- அன்புமணி
- தின மலர்
- காங்கிரஸ்
- திருப்பரங்குன்றம்
- விருதுநகர் தொகுதி காங்கிரஸ்
- மணிகாம் தாகூர்
- மதுரை, திருநகர்
- மோடி
- Edapadi
திருப்பரங்குன்றம்: மதுரை, திருநகரிலுள்ள அலுவலகத்தில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மோடியும், எடப்பாடியும் சிரித்து, சிரித்து பேசினார்கள். மோடிக்கு ஆங்கிலம் தெரிந்ததா, அல்லது எடப்பாடிக்கு இந்தி தெரிந்ததா?
அப்படி ஆங்கிலம் தெரிந்த மோடி இந்தியில் பேசியது ஆணவத்தின் உச்சம். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றுகிறது. அன்புமணி, எடப்பாடி பழனிசாமி, தினகரன் மீது சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இந்த கூட்டணிக்கு, என்டிஏ என பெயரிடுவதற்கு பதிலாக சிபிஐ கூட்டணி என்று பெயர் வைக்கலாம். இவ்வாறு கூறினார்.
