×

மோடி நினைப்பது எடப்பாடி சொல்வது ஒருபோதும் நடக்காது: வைகோ பளீர்

திருச்சி: வரும் தேர்தலில் மோடி நினைப்பதும் நடக்காது, எடப்பாடி சொல்வதும் நடக்காது என வைகோ கூறினார். திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியால் தேர்தல் ரேஸில் திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க இயலாது. அதிமுக-பாஜ கூட்டணியில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்கிறார்.

மோடியோ என்டிஏ கூட்டணி ஆட்சி என்கிறார். இது ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன. இரண்டும் நடைமுறையில் சாத்தியமில்லை. மோடி நினைப்பதும் நடக்காது, எடப்பாடி சொல்வதும் நடக்காது. அதிமுக தோல்வி உறுதியாகிவிட்டது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே தற்போதுள்ள கூட்டணி அமைப்பே வெற்றிக்கு போதுமானது. இவ்வாறு கூறினார்.

Tags : Modi ,Edappadi ,Vaiko Palir ,Trichy ,Vaiko ,MDMK ,General Secretary ,Trichy airport ,AIADMK alliance ,DMK alliance ,AIADMK ,BJP… ,
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் குழி தோண்டும் டிடிவி