×

‘யாராவது கூட்டணிக்கு கூப்பிடுங்க’: கிருஷ்ணசாமி புலம்பல்

கோவை:தொடர் தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மதுரையில் மாநில மாநாட்டினை நடத்தினார். அதில் கூட்டணி ஆட்சி என்ற முறையில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் எந்த கட்சியும் கிருஷ்ணசாமியை கண்டு கொள்ளாததால், அந்த தீர்மானத்தை கைவிட்டு விட்டார். இருப்பினும் அதிமுக கூட்டணியில் சேர எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பச்சைக் கொடி காட்டப்படாததால், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இதேபோல திமுகவும் கண்டுகொள்ளாததால், தவெகவோடு கூட்டணி சேரலாம் என கணக்கு போட்டு தூது விட்ட நிலையில் விஜய்யும் அவரை கண்டுகொள்ளவில்லையாம்.

எந்த நிபந்தனையும் இன்றி கூட்டணியில் சேர தயார் என அவர் அறிவித்த நிலையிலும், முக்கிய கட்சிகள் எதுவும் அழைக்காமல் தனித்து விடப்பட்டதால், ‘யாராவது கூட்டணிக்கு கூப்பிடுங்க?’ என புலம்பி வருகிறாராம். இருப்பினும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் ‘‘100 தொகுதிகளில் நாங்கதான் ஸ்ட்ராங். நாங்கள் இன்றி தென் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது. ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன்’’ என வெத்து கெத்து காட்டி வருகிறாராம்.

Tags : Krishnasamy ,Coimbatore ,Puthiya Tamil Nadu Party ,AIADMK ,Madurai ,
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் குழி தோண்டும் டிடிவி